நாத இன்பம் சபா, லஸ் அவென்யூ நாகேஸ்வர ராவ் பூங்கா எதிரே உள்ளது. இங்கு வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கர்நாடக சங்கீத இசை விழா நடத்துகின்றனர். ஆனால் இந்த வருடம் அவர்களின் இசை விழாவின் கச்சேரிகள் அனைத்தையும் வெப்காஸ்ட் செய்ய உள்ளனர்.
இந்த வருட இசை விழா இன்று டிசம்பர் 10, ம் தேதி மாலை 6.15 மணிக்கு சிக்கில் குருச்சரனின் வாய்ப்பாட்டுடன் துவங்க உள்ளது. இந்த இசை விழா ஜனவரி 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் ஒரு கச்சேரியுடன் இசைவிழா நடக்கவுள்ளது. சில நாட்களில் இரண்டு மூன்று கச்சேரிகளும் நடக்கும்.
அனைத்து கச்சேரிகளும் நாத இன்பம் சபாவின் ராக சுதா அரங்கில் முன்கூட்டியே ரெக்கார்ட் செய்யப்பட்டு பின்பு ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சியில் ஜெயந்தி குமரேஷ், பாரத் சுந்தர், ஆர்.கே. ஸ்ரீராம்குமார், ஜெ.எ. ஜெயந்த், இஞ்சிக்குடி சுப்பிரமணியன், மயிலை கார்த்திகேயன், பிருந்தா மாணிக்கவாசகம், நிஷா ராஜகோபாலன் ஆகியோரது கச்சேரிகள் இடம்பெறவுள்ளது.
இந்த இசை கச்சேரிகள் அனைத்தும் www.youtube.com/parivadinimusic என்கிற யூட்டியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
முழுமையான இசை நிகழ்ச்சிகளின் அட்டவணையை இங்கே பார்க்கவும். https://www.facebook.com/Naada-Inbam-406293536785922.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…