நாத இன்பம் சபாவின் கச்சேரிகள் அனைத்தும் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு.

நாத இன்பம் சபா, லஸ் அவென்யூ நாகேஸ்வர ராவ் பூங்கா எதிரே உள்ளது. இங்கு வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கர்நாடக சங்கீத இசை விழா நடத்துகின்றனர். ஆனால் இந்த வருடம் அவர்களின் இசை விழாவின் கச்சேரிகள் அனைத்தையும் வெப்காஸ்ட் செய்ய உள்ளனர்.

இந்த வருட இசை விழா இன்று டிசம்பர் 10, ம் தேதி மாலை 6.15 மணிக்கு சிக்கில் குருச்சரனின் வாய்ப்பாட்டுடன் துவங்க உள்ளது. இந்த இசை விழா ஜனவரி 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் ஒரு கச்சேரியுடன் இசைவிழா நடக்கவுள்ளது. சில நாட்களில் இரண்டு மூன்று கச்சேரிகளும் நடக்கும்.

அனைத்து கச்சேரிகளும் நாத இன்பம் சபாவின் ராக சுதா அரங்கில் முன்கூட்டியே ரெக்கார்ட் செய்யப்பட்டு பின்பு ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் ஜெயந்தி குமரேஷ், பாரத் சுந்தர், ஆர்.கே. ஸ்ரீராம்குமார், ஜெ.எ. ஜெயந்த், இஞ்சிக்குடி சுப்பிரமணியன், மயிலை கார்த்திகேயன், பிருந்தா மாணிக்கவாசகம், நிஷா ராஜகோபாலன் ஆகியோரது கச்சேரிகள் இடம்பெறவுள்ளது.

இந்த இசை கச்சேரிகள் அனைத்தும் www.youtube.com/parivadinimusic என்கிற யூட்டியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

முழுமையான இசை நிகழ்ச்சிகளின் அட்டவணையை இங்கே பார்க்கவும். https://www.facebook.com/Naada-Inbam-406293536785922.