ஆர்.ஆர் சபாவின் டிசம்பர் சீசன் இசை விழா இன்று தொடக்கம்.

மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ளது ஆர்.ஆர் சபா. இந்த சபாவின் டிசம்பர் சீசன் இசை விழா இன்று டிசம்பர் 10ம் தேதி மாலை 5 மணிக்கு எஸ். சௌம்யா அவர்களின் கச்சேரியுடன் தொடங்குகிறது.

தினமும் ஒரு கச்சேரியுடன் இந்த இசை விழா டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. பெரிய அரங்கில் மூத்த கலைஞர்களும் சிறிய அரங்கில் இளைய கலைஞர்களின் கச்சேரிகளும் நடைபெறவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு பெரிய அரங்கில் நடைபெறும் கச்சேரிக்கு சுமார் 200 நபர்களை அனுமதிக்கின்றனர். இங்கு கச்சேரியை காண வருபவர்கள் அனைவரும் அரசு விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வரவேண்டும், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி அரங்கில் அமரவேண்டும்.

பெரிய அரங்கில் நடைபெறும் கச்சேரிகளில் சீனியர் கலைஞர்கள் விஜய் சிவா, நிஷா ராஜகோபாலன், சிக்கில் குருச்சரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாலை 4 மணிக்கு சிறிய அரங்கில் நடைபெறும் கச்சேரிகளில் ஜூனியர் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரசிகர்களுக்கு கச்சேரிகள் அனைத்தும் இலவசம்.

முழுமையான இசை நிகழ்ச்சிகளின் அட்டவணையை கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/pages/Rasika%20Ranjani%20Sabha/280974662354065/

Verified by ExactMetrics