மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் தற்போது வண்ணம் தீட்டப்பட்டு மிகவும் அழகாக உள்ளது.

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் கச்சேரி சாலையில் உள்ளது. மயிலாப்பூர் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே மகளிர் காவல் நிலையமும் உள்ளது.

சமீபத்தில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளையும் வண்ணம் தீட்டி அதே நேரத்தில் மிகவும் பிரபலமான கார்ட்டூன் படங்களையும் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் எதற்க்காக வைத்துள்ளனர் என்றால், இந்த காவல் நிலையம் தற்போது மகளிர் சம்பந்தமான வழக்குகள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவ வழக்குகளையும் கையாளுகின்றனர். எனவே குழந்தைகள் இங்கு வரும் போது அவர்களுக்குள் இருக்கும் பயத்தை போக்கி ஒரு நல்ல எண்ணத்தையும் தைரியத்தையும் உருவாக்கும் விதத்தில் இந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics