ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் செப்டம்பர் 13ல் ஓணம் கொண்டாட்ட மேளாவாக மாறியது.
4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓணம் பண்டிகையில் திளைத்தனர். எம்.ஏ. நாட்டியத் துறை மற்றும் தொழில் முனைவோர் பிரிவு மாணவர்கள் தொடர்ச்சியான நடனங்கள் மற்றும் ஓணம் சதய விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்..
டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் குமார் ராஜேந்திரன், கல்லூரியில் பல்வேறு கலாச்சாரங்களை மாணவர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறினார்.
வெள்ளியன்று, வளாகத்தில் செண்ட மேளம், காய் கொட்டி களி மற்றும் மோகினி ஆட்டம் மற்றும் புலி காளி மற்றும் கேரள நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
வளாகத்தில் ஒரு அழகான படகு அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அனைவரையும் கவர்ந்தது.
மாணவர்கள் கேரள பாணி புடவைகளை அணிய ஊக்குவிக்கப்பட்டனர்.