மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று காலை இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் இருநூறு நபர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களில் சுமார் எண்பது சதவீதத்தினர் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். முகக்கவசம் அணிவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வந்தனர்.
இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் முதல் முதலாக கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம்வந்தது. பங்குனி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கிராம தேவதை பூஜை நேற்று மதியம் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்றது. பின்பு இரவு விநாயகர் உற்சவம் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.