மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நாளை மதியம் ஊர்க்காவல் தேவதை பூஜையுடன் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. இது பங்குனி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாகும். இதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கொடிகள், திரை சிலைகள் மற்றும் சுவாமி வீதி உலா வாகனங்கள் சரி செய்யும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த பங்குனி திருவிழா நேரத்தில் தேனாம்பேட்டை மயிலாப்பூர் மண்டலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
சில பேர் இந்த திருவிழாவை தள்ளிவைத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தேர்த்திருவிழாவும், அறுபத்து மூவர் வீதி உலாவும் குறைந்த அளவிலான மக்கள் பங்கேற்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபற்றி பொதுமக்கள் பேசி வருகிறார்களே தவிர கொரோனா விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. கோவில்களுக்கு வருபவர்கள் தற்போது பெரும்பாலும் முகக்கவசம் அணிந்து வருவதில்லை.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…