சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் தினமும் புதுப்புது குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் நேற்று காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை இந்த கிளினிக்கில் எவ்வித குழப்பமும் இல்லாமல் அமைதியாக மக்களுக்கு தடுப்பூசிகள் முதல் சுற்று மற்றும் சிலருக்கு இரண்டாம் சுற்று போடப்பட்டது. இது மக்களுக்கும் சுகாதாரத்துறைக்கும் தொடர்பு இடைவெளி இருப்பதை காட்டுகிறது.
கொஞ்ச நாட்களாக காலையில் சுகாதார ஊழியர்கள் கிளினிக்குகளில் டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் வாங்கியவர்களுக்கு தடுப்பூசி கிளினிக்குகளுக்கு வந்தவுடன் வரிசையாக வழங்குவர். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் அதிக நேரம் மூத்த குடிமக்கள் கிளினிக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலர் காலை உணவை வீட்டிலிருந்து எடுத்துவருகின்றனர் சிலர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டவுடன் மீண்டும் கிளினிக்கிற்கு வரவேண்டியுள்ளது. இரண்டாவது பிரச்சனை இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் எத்தனை தடுப்பூசிகள் மையத்திற்கு வரும் என்ற விவரம் தெரிவதில்லை, ஆனால் தோராயமாக டோக்கன் வழங்குகின்றனர். இதனால் சில சமயங்களில் டோக்கன் அதிகமாக வழங்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது.
.மேலும் இங்கு சரியான அறிவிப்பு பலகைகள் இல்லை. அதேபோல தடுப்பூசி இரண்டாவது சுற்று போட வருபவர்கள் ஏற்கனெவே எந்த வகை தடுப்பூசி போட்டுக்கொண்டனரோ அதே வகை தடுப்பூசியைத்தான் போட்டுக்கொள்ளவேண்டும். இந்த செய்தி பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் அங்கு தடுப்பூசி இருப்பு உள்ளதா என்ற விவரமும் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருக்கும்போது மட்டுமே தெரியவருகிறது, இதனாலும் பிரச்னைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் ஒவ்வொருநாளும் பல கிளினிக்குகளில் ஏற்படுகிறது. இதனால் சில நாள் கிளினிக்குகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில நாள் கூட்டமில்லாமல் காணப்படுகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…