கச்சேரி சாலையில் உள்ள காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதாக மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பல்வேறு குற்றங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்ட சில பைக்குகள் கச்சேரி சாலையில் உள்ள காவல்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் காவல் நிலைய வளாகத்தில் பைக்குகள் காணாமல் போனதை ஸ்டேஷனில் பணியில் இருந்த போலீஸார் கவனித்தபோது குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. சமீபத்தில் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து ஒரு பைக்கை இழுத்துச் செல்ல முயன்ற இருவர் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவர்கள், மயிலாப்பூர் ஸ்டேஷனில் பணிபுரியும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுடன் இந்த வேலையை சேர்ந்து செய்ததாக கூறியுள்ளனர். அதன் பிறகு கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டார்.
கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தான் பணியிடத்திற்கு திரும்பினார்யுள்ளார். அவர் மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், பணத்தேவைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது; எனவே, ஸ்டேஷனில் பைக்குகளைக் கொள்ளையடித்து, அவற்றை ஸ்கிராப் டீலர்களிடம் விற்கும்படி இருவரையும் ஊக்குவித்துள்ளார்.
நந்தலாலா மெடிக்கல் பவுண்டேஷன் டிரஸ்ட்' (Nandalala Medical Foundation Trust) ஒரு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இதில்…
கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி (DAV) பெண்கள் பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'மிஷன் குரு தேவோ பவ' (Mission Guru…
பின்பற்ற வேண்டிய குறிப்புகள்: 1. வீட்டில் உள்ள எளிமையான, மறுபயன்பாட்டிற்கு ஏற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும் – காகிதப் பைகள்,…
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…