மயிலாப்பூரில் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள பிரபலமான உணவகம் மாமி டிபன் ஸ்டால் ஊரடங்கின் போது வியாபாரம் வெகுவாகக் குறைந்தது.
கடந்த 12 மாதங்களில், மாமி டிபன் ஸ்டால் முந்தைய கோவிட் நேரங்களுடன் ஒப்பிடும்போது ஐம்பது சதவீதமே இயங்கி வந்தது.
மயிலாப்பூர் டைம்ஸுடன் பேசிய கடையின் உரிமையாளர் ஜி.பாலசுப்பிரமணியன், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காபி மற்றும் சமோசா மட்டுமே வேகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்.
இங்கு பாப்புலர் உணவான தோசை, போண்டா மற்றும் பஜ்ஜி கூட ஊரடங்கு காலத்தில் குறைந்தளவு விற்பனையே நடைபெறுகிறது.
விற்பனை மந்தநிலைக்கு மிகப்பெரிய காரணம் உள்ளூர் கோயில்கள் மூடப்பட்டதே என்று அவர் கூறுகிறார்.
பிரதோஷம் மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் மக்கள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது, இந்த கடையில் விற்பனை அதிகரித்து காணப்படும் என்றும், ஆனால் கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் கோயில்களில் பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 45 நாட்களில் வியாபாரத்தில் ஒரு பெரிய வீழ்ச்சியைக் கண்டோம் என்று உரிமையாளர் கூறுகிறார்.
மூத்த குடிமக்கள் எங்கள் கடையின் முக்கிய வாடிக்கையாளர்கள். ஆனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை. கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அவர்கள் மாலை டிஃபின் மற்றும் காபிக்காக எங்கள் கடைக்கு வருவார்கள்.அதே நேரத்தில் இப்போது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
சாதாரண காலங்களில், இந்த கோவில் வரும் பக்தர்கள் இந்த உணவகத்திற்கு வருவார்கள் அவ்வாறு வரும்போது இந்த பகுதியில் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால் அது இப்போது குறைந்துவிட்டது.
இப்போது மாமி டிபன் ஸ்டாலில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்படுகிறது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…