மெதுவாக இயங்கி வரும் பிரபலமான உணவகமான மாமி டிபன் ஸ்டால்.

மயிலாப்பூரில் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள பிரபலமான உணவகம் மாமி டிபன் ஸ்டால் ஊரடங்கின் போது வியாபாரம் வெகுவாகக் குறைந்தது.

கடந்த 12 மாதங்களில், மாமி டிபன் ஸ்டால் முந்தைய கோவிட் நேரங்களுடன் ஒப்பிடும்போது ஐம்பது சதவீதமே இயங்கி வந்தது.

மயிலாப்பூர் டைம்ஸுடன் பேசிய கடையின் உரிமையாளர் ஜி.பாலசுப்பிரமணியன், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காபி மற்றும் சமோசா மட்டுமே வேகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்.

இங்கு பாப்புலர் உணவான தோசை, போண்டா மற்றும் பஜ்ஜி கூட ஊரடங்கு காலத்தில் குறைந்தளவு விற்பனையே நடைபெறுகிறது.

விற்பனை மந்தநிலைக்கு மிகப்பெரிய காரணம் உள்ளூர் கோயில்கள் மூடப்பட்டதே என்று அவர் கூறுகிறார்.

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் மக்கள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது, ​​இந்த கடையில் விற்பனை அதிகரித்து காணப்படும் என்றும், ஆனால் கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் கோயில்களில் பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 45 நாட்களில் வியாபாரத்தில் ஒரு பெரிய வீழ்ச்சியைக் கண்டோம் என்று உரிமையாளர் கூறுகிறார்.

மூத்த குடிமக்கள் எங்கள் கடையின் முக்கிய வாடிக்கையாளர்கள். ஆனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை. கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அவர்கள் மாலை டிஃபின் மற்றும் காபிக்காக எங்கள் கடைக்கு வருவார்கள்.அதே நேரத்தில் இப்போது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண காலங்களில், இந்த கோவில் வரும் பக்தர்கள் இந்த உணவகத்திற்கு வருவார்கள் அவ்வாறு வரும்போது இந்த பகுதியில் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால் அது இப்போது குறைந்துவிட்டது.

இப்போது மாமி டிபன் ஸ்டாலில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்படுகிறது.

Verified by ExactMetrics