மெட்ராஸ் டே 2024: இராணி மேரி கல்லூரியில் பேரணி, பேச்சு போட்டிகள் மற்றும் பல. ஆகஸ்ட் 22.

இராணி மேரி கல்லூரி ஆகஸ்ட் 22 அன்று மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் வண்ணமயமான கொண்டாட்டத்தை அதன் வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

புவியியல் துறையால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்கு கேக் வெட்டப்பட்டு, மெரினா வளாகத்தில் உள்ள மாணவர்களின் பேரணியுடன் தொடங்குகிறது.

பின்னர், ப்ளாக்கர் மற்றும் பாரம்பரிய ஆர்வலருமான டி.கே கிருஷ்ணகுமார் நகர பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட கருப்பொருளில் உரை நிகழ்த்துகிறார்.

பின்னர் கல்லுாரியில் நடைபெற பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கல்லூரி முதல்வர், டாக்டர். உமா மகேஸ்வரி மற்றும் புவியியல் துறையின் தலைவர், டாக்டர். எஸ். கீதா ஆகியோர் கல்லூரி ஆண்டுதோறும் கொண்டாடும் இந்த நிகழ்விற்கான திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

Verified by ExactMetrics