ராதா சுவாமியின் சிறப்பு மையம் திறப்பு. இதன் மூலம் மூன்று சிவசாமி குழு பள்ளிகளின் மாணவர்கள் உட்புற விளையாட்டு, ரோபாட்டிக்ஸ், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றில் பயிற்சியை பெறுவார்கள்.

மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட வீதியில் ஒரு காலத்தில் இருந்த பள்ளி இப்போது ‘சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ்’.

திங்கள்கிழமை மாலை (டிசம்பர் 6) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராதா சுவாமிகள் சிறப்பு மையத்தை முறைப்படி திறந்து வைத்தார். இந்த நிகழ்வை குறிக்கும் விதமாக அவர் ஒரு பலகையைத் திறந்து வைத்தார். ஒவ்வொரு தளமும் ஒரு செயல்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட்டுள்ளதை அவர் பார்வையிட்டார்.

அறிவியல் கற்றலுக்கு ஒரு தளம், டேபிள் டென்னிஸ், கேரம் மற்றும் செஸ் ஆகியவற்றுக்கு ஒன்று, இசை மற்றும் நடனம் மற்றும் கலைகளுக்கு ஒன்று, போட்டித் தேர்வுகளில் பயிற்சி அளிப்பதற்காக ஒன்று, இந்திய பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்க ஒரு இடம் – இவை அனைத்தும் மூன்று பள்ளிகளில் படிக்கும் 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கானது. மயிலாப்பூரில் உள்ள தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள்.

பள்ளிகள் – லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி. சர் சிவசாமி கலாலயா சீனியர் பள்ளி மற்றும் சிவசாமி கலாலயா மேல்நிலை பள்ளி.

இந்தப் பள்ளிகளின் மாணவர்கள், வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக இந்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், சில சமயங்களில், பயிற்சி மாலை தாமதமாக நடைபெறும் – உதாரணமாக டேபிள் டென்னிஸ்.

இந்த இடத்தை ரீமேக் செய்து தனது தாயார் ராதா சுவாமிக்கு அர்பணித்துள்ளதாகவும், இந்த பள்ளிகள் இசை மற்றும் நடனம் மற்றும் விளையாட்டுகளை வழங்குகிறது. இவற்றில் எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும், மாணவர்கள் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும், அதற்கான இடம் இதுதான். என்று இந்த பள்ளிகளை நிர்வகித்து வரும் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கே சுவாமி கூறுகிறார்.

திங்கட்கிழமை நிகழ்வானது மூன்று பள்ளிகளின் முதல்வர்கள் , மற்றும் ஆசிரியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கான இடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுவாமி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளர் எஸ்.ஸ்ரீதரன், செயலர் வத்சலா நாராயணசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்து பேசினர்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago