மெரினா கடற்கரை சாலையில் அரசின் சார்பாக குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இது தவிர மயிலாப்பூரில் பல இடங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. லஸ் பேராலயத்தில் பூசைகள் முடிந்தவுடன் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆர்.ஏ. புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களும் இளைஞர்களும் சேர்ந்து அங்கு இருக்கும் பூங்காவில் கொடியேற்றினர்.
இசபெல் மருத்துவமனையில் படிக்கும் மாணவிகள் சேர்ந்து பெரிய தேசியக்கொடி ரங்கோலி கோலம் போட்டு குடியரசு தின விழாவை கொண்டாடினர். சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவின் தலைவர்களும் மற்றும் அங்கு பணிபுரிவர்களும் சேர்ந்து குடியரசு தினவிழாவை கொடியேற்றி கொண்டாடினர்.
சிவசாமி கலாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் சேர்ந்து குடியரசு தின விழாவை கொண்டாடினர். ஆனால் பள்ளிகளில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் கொரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்கள் பங்கேற்கவில்லை. சி.ஐ.டி காலணியில் உள்ள பூங்காவில் அங்கு வசிக்கும் மக்கள் கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…