செயின்ட் மேரிஸ் சாலையின் கிழக்கு பகுதியில் அதிக தூசி பரவுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு

St Marys road dust issueசெயின்ட் மேரிஸ் சாலையின் கிழக்கு முனையை (ஆர்.கே. மட சாலைக்கு அருகில்) பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடந்த சில நாட்களாக அப்பகுதிகளில் தூசி அதிகமாக காற்றில் வருவதாக புகார் கூறுகின்றனர்.

சிவராமன் தெருவுக்கு எதிரே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்களின் மேல் பைக்குகள், பஸ்கள் ஓடுவதால் இது ஏற்படுவதாக கூறுகின்றனர்.

இந்த மண் எதற்காக இங்கு கொட்டப்பட்டது, யாரால் கொட்டப்பட்டது என தெரியவில்லை என புகார் அளித்த மக்கள் தெரிவித்தனர்.

Verified by ExactMetrics