இந்த கோவிட்-19 காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் ரெஸ்டாரெண்ட் தொழில். சிலர் தங்களது கடையை மூடிவிட்டனர். சிலர் பெரிய பகுதியிலிருந்து சிறிய பகுதிக்கு இடம் மாறி விட்டனர். சிலர் கேட்டரிங் தொழில் செய்கின்றனர். இது போன்று நிறைய மாற்றங்கள் உணவகம் தொழிலில் ஏற்பட்டுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மிகவும் பிரபலமான உணவகம் சங்கீதா ரெஸ்டாரண்ட். இவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உணவகத்தை திறந்த போது கடையை ஒட்டி ஒரு சிறிய அளவிலான காய்கறி மற்றும் பழக் கடையை நடத்தி வந்தனர். தற்போது இந்த காய்கறி கடை விரிவுபடுத்தப்பட்டு காய்கறி, பழங்கள், இட்லி தோசை மாவுகள், ஸ்னாக்ஸ் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இதேபோன்று இவர்களுடைய ஊழியர்கள் கடையின் வாயிலருகே வந்து சாலையில் காரில் வருபவர்களுக்கு அவர்களது வாகனத்திற்கே உணவு மற்றும் ஸ்னாக்ஸ் போன்றவற்றை கொண்டு வந்து வழங்குகின்றனர். இந்த கொரோனா காலத்தில் சங்கீதா உணவகம் இதுபோன்ற சேவையை வழங்குகின்றனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…