2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் ஆங்காங்கே பரவத்தொடங்கிய போது சென்னை கார்ப்பரேஷன் உள்ளூர் பகுதி மக்களுக்கு சேவையாற்ற டஜன் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தியபோது, கடலோர காலனியான பட்டினப்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த தீபாவும் கையெழுத்திட்டிருந்தார்.
இந்த மனிதவள பயிற்சி பெற்ற பட்டதாரி தனது இரண்டு இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கும் தனது குடும்ப தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்த சவாலான வேலையை செய்து சம்பாதிக்க விரும்பினார்.
இவருடைய பணி என்னவென்றால் வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிவது, அவர்களை தனிமைப்படுத்துவது, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையைப் பெற ஏற்பாடு செய்வது போன்ற வேலைகள் – இவர் 2020 ஆம் ஆண்டு முழுவதும் உழைத்தார், கடந்த ஆண்டின் முடிவில் இவரது ஒப்பந்தம் முடிவடைந்தது.
ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வைரஸின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியது, தீபா மீண்டும் ஒப்பந்த கோவிட் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவரது தொடர்ச்சியான களப்பணி மற்றும் சில குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக, இந்த வாரம் ஜி.சி.சி யின் உள்ளூர் அதிகாரிகள் பாராட்டினர். அவர்கள் தீபாவுக்கு ஒரு சிறப்பு டி-ஷர்ட் வழங்கினர். இந்த நிகழ்வில் பகுதி பொறியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.
மக்கள் தடுப்பூசி போட மறுத்துவரும் சீனிவாசபுரத்தில் கடந்த வாரம், தீபாவும் அவரது குழுவும் சுமார் 50 பேரை தடுப்பூசி போட வைத்தனர். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,
வார்டு 173-ல் (ஆர்.ஏ.புரம் – கே.வி.பி கார்டன்ஸ் – எம்.ஆர்.சி நகர் – சீனிவாசபுரம்) கணக்கெடுக்கும் இவரும் இவரது குழுவும் வைரஸ் அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, சீக்கிரம் சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தீபா கூறுகிறார்.
மே மாதத்தின் 39 டிகிரி வெப்பத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் வரை செய்யும் இந்த வேலை எளிதான வேலை அல்ல.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…