இந்த வருடம் கொரோனா காரணமாக நிதி உதவி அளிக்கும் திட்டத்தை தாமதமாக தொடங்கி உள்ளது. மயிலாப்பூரிலுள்ள வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இதுவரை சில்ட்ரன்ஸ் கார்டன் மற்றும் இராணி மெய்யம்மை பள்ளிகளை சேர்ந்த பன்னிரெண்டு மாணவர்களுக்கு எழுபத்தி ஏழாயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து காத்துக்கொண்டுள்ளனர்.
நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு நிதிஉதவி அளிக்க விரும்பினால் பொதுமக்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலக மேனேஜர் சாந்தியை 2498 2244 / 24671122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் அளிக்கும் நிதிஉதவிக்கு வரிவிலக்கு உண்டு. ரசீது வழங்கப்படும். நீங்கள் நேரிடையாக ஆன்லைன் வழியாகவும் பணத்தை செலுத்தலாம். இந்த உதவி தொகை பொதுமக்கள் வழங்கும் நிதியிலிருந்தும் மற்றும் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிதியிலிருந்தும் வழங்கப்படுகிறது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…