குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நடத்திய சர்வேயின்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.

மயிலாப்பூர் டைம்ஸ் சார்பாக சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களிடையே சிறிய சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே சுமார் முப்பத்திரண்டு நபர்களிடம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் ஆறு நபர்கள் ஆண்கள் மீதிபேர் பெண்கள். இந்த சர்வேயின் படி மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு அவர்கள் பின்வரும் காரணங்களை பட்டியலிடுகின்றனர்.

* நோயினால் நான் பாதிக்கப்படவில்லை அதனால் எனக்கு தடுப்பூசி தேவையில்லை.
* ஏற்கனெவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டேன் அதனால் எனக்கு தேவையில்லை. மீண்டும் கொரோனா வந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்வேன்.
* இந்த பகுதியில் வீசும் கடல் காற்று என்னுடைய உடலுக்கு ஏற்றவாறு உள்ளது. நான் ஆரோக்கியமாக உள்ளேன்.
* இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.

மேலும் இங்கு வசிக்கும் மக்கள் பொதுவாக சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனெவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதனால் எனக்கு இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்ள விருப்பமில்லை. மேலும் இங்கு வசிக்கும் மக்களுக்கு எங்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்பது பற்றிய தகவல் கூட சரிவர தெரியவில்லை. சிலர் ஆர்.ஏ. புரம், மந்தைவெளி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் இருப்பிடம் அருகே உள்ள அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் பற்றி தெரியவில்லை. எனவே சென்னை மாநகராட்சி இது போன்ற பகுதிகளில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் தகவலை தெரிவிக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தையும் தெரியப்படுத்த வேண்டும்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago