பங்குனி பெருவிழாவிற்காக கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகமும் உள்ளூர் காவல்துறையினரும் சில விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலாவதாக கோவிலுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பின்பு கோவில் வாயில் அருகே வைத்திருக்கும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
அறுபத்து மூவர் விழா அன்று எப்பொழுதும் நடைபெறும் தெருக்களில் பிரசாதங்கள் வழங்குவது, அன்னதானம் போடுவது, போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தேர் திருவிழா, அறுபத்திமூவர் விழா சுவாமி ஊர்வலம் எப்பொழுதும் போல நடைபெறும். ஆனால் அர்ச்சனைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படாது. சுவாமி வழிகளில் எப்பொழுதும் போல நிற்காது. தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று கோவிலுக்குள் பொதுமக்கள் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூவர் விழா அன்று ராயப்பேட்டை நெடுஞ்சாலை போக்குவரத்து வழக்கம் போல சில மணி நேரம் நிறுத்தப்படும்.