ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் சூரசம்ஹார நிகழ்வானது வடக்கு மாட வீதியில் வழக்கமாக நடைபெறும். இன்று மாலை 7 மணிக்கு வடக்குப் பிரகாரத்தில் உள்ள கோயில் அலுவலகம் அருகே நடைபெறவுள்ளது. மேலும், சூர சம்ஹார விழாவை முன்னிட்டு இன்று மாலை கோவிலின் ராஜகோபுரத்தின் பிரதான கதவு மூடப்படும்.
கடந்த சில மாதங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது போலவே. சூரசம்ஹார நிகழ்வு முடிந்த உடனேயே பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படும்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் டி காவேரி மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறியதாவது: சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு எந்த கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. “மாலையில் கூட்டம் அதிகமாக இல்லை என்றால், கதவைத் திறந்து வைப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்.”
முன்னறிவித்தபடி பலத்த மழை பெய்தால், சூரசம்ஹார நிகழ்ச்சி நவராத்திரி மண்டபத்தில் நடைபெறும்.
செய்தி : எஸ்.பிரபு