செய்திகள்

ஆர்.ஏ. புரத்தில் பிளஸ் டூ வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்

ராப்ரா (ஆர்.ஏ.புரம் குடியிருப்பாளர்கள் நலச்சங்கம்) ஸ்டேட் போர்டு ஆங்கில மீடியம் ஸ்ட்ரீமில் உள்ள 12 ஆம் வகுப்பு காமர்ஸ் ஸ்ட்ரீம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும்.

ஆர்.ஏ.புரத்தில் ஜூலை 2ம் தேதி முதல் வகுப்புகள்தொடங்கும். கணக்கியல் மற்றும் வணிகவியல் வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடத்தப்படும்.

ராப்ராவின் புரவலர் டாக்டர் சந்திரசேகரன், கணக்கியல் பிரிவில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் நன்றாக இருப்பதாகவும், பிளஸ் டூ மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறவும், பி.காம் படிப்பை முடித்து நன்றாக பட்டம் பெறவும் சங்கம் விரும்புகிறது என்று கூறினார்.

பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

முன் பதிவு கட்டாயம். ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூரைச் சுற்றியுள்ள மாணவர்கள் 98410 30040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மயிலாப்பூர்வாசிகள் இந்த தகவலை பயனடையக்கூடிய இளைஞர்கள் அல்லது பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ராப்ரா அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

admin

Recent Posts

விற்பனை: கைவினைப்பொருட்கள், விளக்குகள், பாரம்பரிய அலங்காரங்கள், தஞ்சை ஓவியங்கள்

ஸ்ருஷ்டி: தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் மற்றும் நல சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள கடையில் செப்டம்பர் 15…

2 days ago

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான போட்டி.தொடக்கம்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான மயிலாப்பூர் டைம்ஸ் போட்டி தொடங்கியது. கிடைக்கக்கூடிய பொருட்களிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த குடையை வீட்டிலேயே உருவாக்கவும், இந்த…

2 days ago

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணனின் இல்லத்தில் அவரது சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய மாணவிகள்.

மயிலாப்பூரில் உள்ள குழந்தைகள் பூங்கா பள்ளி மாணவர்கள், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை காலை மறைந்த இந்திய குடியரசுத்…

2 days ago

பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர், ஆழ்வார்பேட்டை மண்டல மக்களின் வெள்ள பிரச்சனைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம்.

செப்டம்பர் 3 ஆம் தேதி, சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் பிரவீன் குமார் ஐஏஎஸ் வீனஸ் காலனியில் நடைபெற்ற…

2 days ago

மந்தைவெளி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலின் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ணம், செப்டம்பர் 8ல்.

மந்தைவெளி மாரி செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தில் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ண சடங்கு செப்டம்பர் 8ஆம் தேதி…

3 days ago

மந்தைவெளிப்பாக்கத்தில் காரைக்கால் அம்மையாரை மையமாக கொண்ட தமிழ் நாடகம். செப்டம்பர் 7

காரைக்கால் அம்மையார் கருப்பொருளில் தமிழ் நாடகம், தி கல்யாண நகர் சங்கம், எண்.29, டி.எம்.எஸ்.சாலை, மந்தைவெளிப்பாக்கம் என்ற இடத்தில் அரங்கேற்றப்படவுள்ளது.…

3 days ago