லாசரஸ் சர்ச் சாலையில் வசிக்கும் ஷோபா சண்முகன் மற்றும் அவரது மகன் எஸ்.தீபக் (இவர் ஒரு மாற்றுத்திறனாளி) ஆகியோர் திருவிழா நேரத்தில் விற்கக்கூடிய பொருட்களை தயாரித்து விற்று வருகிறார்கள்.
நவராத்திரிக்கு, அவர்களின் சமீபத்திய தயாரிப்பு காடா துணியால் செய்யப்பட்ட பேக் (பை) ஆகும், இது ஷாப்பிங் மற்றும் பரிசுகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
“எங்களிடம் இந்த பைகள் நான்கு அளவுகள் உள்ளன. என் மகன் தீபக் பைகளில் அக்ரிலிக் ஓவியம் வரைகிறான். குறைந்தபட்சம் 10 ஆர்டருக்கான வாடிக்கையாளர்களுக்கு தேவியான ஆர்டர்களையும் நாங்கள் செய்கிறோம். ஆர்டர் செய்யப்பட்ட பிறகு பைகள் தயாரிக்கப்படுகின்றன, என்று தாய் ஷோபா கூறுகிறார்.
ரூ.25, ரூ.50, ரூ.75 மற்றும் ரூ.100 என, அளவைப் பொறுத்து
பைகளின் விலைகள் உள்ளன.
அவரது தாயின் ஆதரவுடன், வர்ணம் பூசப்பட்ட விளக்குகள், மசாலா பொடிகள் மற்றும் வசம்பு மற்றும் பச்சை கற்பூரம் போன்ற நாட்டு மருந்துகளால் செய்யப்பட்ட இயற்கை பூச்சிக்கொல்லிகளையும் செய்து வருகிறார் தீபக்.
விலை ரூ.40 இந்த பாக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்,” என்கிறார் ஷோபா.
அவர்களின் மற்ற தயாரிப்புகளில் மெழுகுவர்த்தி, நெய் அல்லது வர்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள், பூஜை மற்றும் தோட்டம் மற்றும் ஆடம்பரமான காட்சிக்கு பயன்படுத்தக்கூடிய வர்ணம் பூசப்பட்ட பானைகள் ஆகியவை அடங்கும்.
ஆர்டர் செய்ய, ஷோபா சண்முகத்தை 9444953733 / 9445635743 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். தயாரிப்புகளை கூரியர் மூலமும் பெறலாம்.
www.dsartscrafts.com இல் இவர்களின் தயாரிப்புகளைப் பார்க்கவும்
செய்தி: ப்ரீத்தா கே.