மயிலாப்பூரில் ஆண்டுதோறும் ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர் விருதை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், மயிலாப்பூர் விழாவின் இறுதி நாளில் வழங்குகிறது.
இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள திறந்தவெளி மேடையில் நடைபெற்ற விழாவில், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சி.லோச்சன், சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கு விருதை வழங்கினார். இந்த விருதை கல்லூரி முதல்வர் மற்றும் பொறுப்பாளர் அருணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.
இந்த கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. இது 1906 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற சட்ட வல்லுநரான வி. கிருஷ்ணசுவாமி ஐயரால் நிறுவப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், ஆன்லைன் தளத்தின் மூலம் சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்கும் கற்பிப்பதற்கும் கல்லூரி அதன் டிஜிட்டல் வளாகத்தைத் தொடங்கியது,
இன்று அவர்கள் வளாகத்தில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர், என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.
விஜயா ஸ்டோர்ஸ், ராசி சில்க்ஸ், டென்னிஸ் ஜாம்பவான் ராமநாதன் கிருஷ்ணன், பிஎஸ் மேல்நிலைப் பள்ளி, டப்பா செட்டி கடை மற்றும் பேராசிரியர் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றவர்கள்.
இந்த விருதானது மயிலாப்பூர் நபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.