மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது .
அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால், பெரும்பாலான மக்களுக்கு மாடவீதியில் ஊர்வலம் நடக்கும் என்று தெரியவில்லை. கடந்த ஒன்பது மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்த ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் முடிந்த பிறகு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவகாமிக்கு கோவிலின் மண்டபத்தில் இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பின்னர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது.
ஞாயிற்றுகிழமை காலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாடவீதியில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புகைப்படம்: எஸ்.பிரபு, மற்றும் மதன்
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…