மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7 மணிக்கு மாணவர்களின் கச்சேரியுடன் தொடங்கவுள்ளது.
இந்த விழா ஜனவரி 8 தொடங்கி ஜனவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் நாதஸ்வரம், இசை கச்சேரி, பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம், கோலப்போட்டி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், ஹெரிடேஜ் நடைபயணம், சமையல் போட்டி, செஸ் போட்டி, புகைப்பட கண்காட்சி மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது.
போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு தாயக்கட்டம், பல்லாங்குழி, மயிலாப்பூர் வினாடி வினா போட்டிகள் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் சிறப்பாக லேடி சிவசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகள் பற்றிய அட்டவணை விவரங்களை இந்த இணையதளத்தில் www.mylaporefestival.in சென்று தெரிந்து கொள்ளலாம்.
அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.




