தத்வலோகாவில் நவம்பர் 26ல் ‘ஆன்மிக விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி.

சிருங்கேரியின் 35வது ஜகத்குருவான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவத்தையொட்டி, தத்வலோக ஆடிட்டோரியத்தில் ‘ஆன்மிக விருதுகள் 2022’ நடத்தப்படுகிறது.

‘சிருங்கேரி பீடம் மற்றும் அதன் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு நிலையான மற்றும் நேர்மையான சேவை மற்றும் பங்களிப்பை கவுரவித்தும் பாராட்டும் விதமாகவும்’ விருதுகள் வழங்கப்படும்.

அமல்கமேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு டாக்டர் டி.ஜி.சந்திரசேகர், தென்காசி அமர் சேவா சங்கத்தைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீ வித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் ‘நரசிம்ம தத்துவத்தின் மகிமை’ என்ற தலைப்பில் பேசுவார்கள்.

இடம்: தத்வலோக ஆடிட்டோரியம்
நாள்: நவம்பர் 26, மாலை 4 மணி முதல்.
அனைவரும் வரலாம்.

முகவரி : நெ.76, எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை. தொலைபேசி எண்: 2432 8124.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

6 hours ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

1 day ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

4 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

5 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

5 days ago