தத்வலோகாவில் நவம்பர் 26ல் ‘ஆன்மிக விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி.

சிருங்கேரியின் 35வது ஜகத்குருவான ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவத்தையொட்டி, தத்வலோக ஆடிட்டோரியத்தில் ‘ஆன்மிக விருதுகள் 2022’ நடத்தப்படுகிறது.

‘சிருங்கேரி பீடம் மற்றும் அதன் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு நிலையான மற்றும் நேர்மையான சேவை மற்றும் பங்களிப்பை கவுரவித்தும் பாராட்டும் விதமாகவும்’ விருதுகள் வழங்கப்படும்.

அமல்கமேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு டாக்டர் டி.ஜி.சந்திரசேகர், தென்காசி அமர் சேவா சங்கத்தைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீ வித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் ‘நரசிம்ம தத்துவத்தின் மகிமை’ என்ற தலைப்பில் பேசுவார்கள்.

இடம்: தத்வலோக ஆடிட்டோரியம்
நாள்: நவம்பர் 26, மாலை 4 மணி முதல்.
அனைவரும் வரலாம்.

முகவரி : நெ.76, எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை. தொலைபேசி எண்: 2432 8124.

Verified by ExactMetrics