விருத்தாசலத்தை சேர்ந்த கைவினைஞர்கள் கார்த்திகை தீபத்திற்காக விளக்குகளை விற்பனை செய்கின்றனர்.

விருத்தாசலத்தை சேர்ந்த குடும்பத்தினர் வியாழன் முதல் மயிலாப்பூரில் மண் விளக்குகளை பாலிஷ் செய்து விற்பனை செய்வதற்காக லஸ்ஸில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

தற்போது இந்த குழுவினர் லஸ் சர்ச் சாலையில் விற்பனையை துவக்கியுள்ளனர்.

விரைவில் இந்த சிறு குழுக்களின் உறுப்பினர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் கார்த்திகை தீபத்திற்காக விளக்குகளை விற்பனை செய்யவுள்ளனர்.

விலை ரூ.10 முதல் ரூ.40 வரை.