மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது.
டஜன் கணக்கான காலி டிரம்கள் கோயில் குளத்தின் படிகளில் எடுத்துவரப்பட்டு தெப்பம் அமைப்பதற்கான அடிப்படை வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வேலை முடிந்ததும், தெப்பம் அலங்கரிப்பவர் வேலையைத் தொடங்குவார். பின்னர் நேரடி அலங்காரம் இருக்கும் பிப்ரவரி 12 ஆம் தேதி தெப்பத்தின் முதல் நாள் விழா நடைபெறும்.
செய்தி: மதன் குமார்