டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பத்ரிநாதன். இவர் ஒரு முதுகலை எம்.எஸ்சி கணித பட்டதாரி. இவர் பல வேலைகளை தேடினார், வங்கியில் இருந்து கூட இவருக்கு வேலை வந்தது. ஆனால் இவர் தபால் நிலைய வேலையையே விரும்பி பணியில் சேர்ந்துள்ளார். ஏனென்றால் இவருடைய தந்தை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இவரும் தபால் துறையில் நாற்பது வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். போஸ்ட்மேனாக இருந்து பின்பு தலைமை பதவியில் பணியாற்றியவர். இவரது தந்தையும் தபால் அலுவலக வேலையில் சேர ஒரு காரணமாக இருந்துள்ளார்.
இந்த கொரோனா நேரத்தில் இவர் கைகளில் கையுறை அணிந்து தபால்களை விநியோகம் செய்து வருகிறார். இந்த நேரத்தில் அதிகளவில் கொரோனா தவிர்த்து வேறு நோய்களுக்கு வரும் மருந்து பார்சல்களை டெலிவரி செய்வதாக கூறுகிறார். அதே நேரத்தில் மக்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கி பணத்தை சேமித்து வருகின்றனர். அவ்வாறு சேமித்து வருபவர்களில் யாராவது இறந்து போனால் அந்த பணபலன்களை அவருடைய குடும்பத்தாருக்கு பெற்று தரும் வேலையையும் செய்து வருகிறார். இது போன்ற சேவை செய்வது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவிக்கிறார்.