பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 16 சீடர்களில் ஒருவரும், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தாவைக் கருவாகக் கொண்ட தமிழ் நாடகம்.

127 வருட சேவையை நிறைவு செய்யும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தை நிறுவிய பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 16 சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் வாழ்க்கை மற்றும் பணியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாடகத்தை உருவாக்கியுள்ளது.

‘சர்வம் குருமயம் சுவாமி ராமகிருஷ்ணானந்தா’ என்ற தலைப்பில் இந்த நாடகம் ஜூலை 28, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நாரத கான சபாவின் மெயின் அரங்கில் அரங்கேறவுள்ளது.

பிரயத்னா குழும இயக்குனர் விவேக்சங்கர் நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த நாடகத்தில் சங்கர் இசையமைக்க, மூத்த கலைஞர் ‘காத்தாடி’ ராமமூர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics