நாடகம் மற்றும் சினிமா நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் நூறாவது வருட பிறந்த நாள் கடந்த வாரம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நகரில் உள்ள கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர்.
விழாவில் மூத்த நாடக கலைஞர் T.D. சுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ ஆர்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது வழங்கினார். பூர்ணம் விஸ்வநாதன் குடுமபத்திற்கு ஆர்.நடராஜ் உறவினராவர். விழாவில் பூர்ணம் விஸ்வநாதன் மகன், காத்தாடி ராமமூர்த்தி, டாக்டர் சாய் மற்றும் பலர் நாடகங்களில் பூர்ணம் விஸ்வநாதனின் அளப்பரிய பங்கு பற்றியும், வாழ்க்கை பற்றியும், சினிமாவில் அவருடைய பங்கு பற்றியும் நினைவு கூர்ந்தனர்.
இந்த விழாவில் வயது மூப்படைந்திருந்தாலும் பூர்ணம் விஸ்வநாதனின் மனைவி கலந்து கொண்டார். அவருக்கு பலரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்வில் பாரதிய வித்யா பவனின் தலைவர் கே.என். ராமசாமி கலந்துகொண்டார். மேலும் அவர் பேசுகையில் நாடக கலைஞர்களுக்கு நாடகங்களை ஒத்திகை பார்ப்பதற்காக பாரதிய வித்யா பவனில் ஒரு சிறிய இடம் வழங்கப்படும் என்று கூறினார்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…