தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் நேற்று திங்கட்கிழமை அனைத்து சென்னை மாநகராட்சி கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆனால் இதற்கு முன் மக்கள் தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி ஒரு புதிய முறையை பின்பற்றினர். புதிய முறையின் படி சென்னை மாநகராட்சி வலைதளத்தில் ஒரு வெப்லிங்கை உருவாக்கியிருந்தனர். மக்கள் இந்த குறிப்பிட்ட வெப்லிங்கின் மூலம் பதிவு செய்து குறிப்பிட்ட நாட்களில் அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதுபோன்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு தனியாக ஒரு பிரிவு மையங்களில் இயங்கி வந்தது.
ஆன்லைன் வழியாக பதிவு செய்து வருபவர்களுக்கு முப்பது சதவீத தடுப்பூசிகளையும், தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு நேரிடையாக வருபவர்களுக்கு சுமார் எழுபது சதவீதமும் தடுப்பூசி செலுத்தி வந்தனர். ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் உள்ள கிளினிக்கில் தடுப்பூசி கொடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக சென்னை மாநகராட்சி கிளினிக்கிற்கு அருகே பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் டோக்கன் கொடுக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து வந்தவர்களுக்கு ஒரு வரிசையும் நேரிடையாக வந்தவர்களுக்கு ஒரு வரிசையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஆன்லைன் வழியாக தடுப்பூசி போட பதிவு செய்ய பொதுமக்கள் கீழே உள்ள வலைதள லிங்கை பயன்படுத்தி கொள்ளவும். https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…