கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (டிசம்பர் 20, 2020) மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலை மூன்று மணியளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கைரைக்கு வந்தனர்.
மெரினா கடற்கரை சாலையில் எந்தவிதமான வாகனங்களையும் நிறுத்த போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை. சர்வீஸ் சாலைகளில் மட்டுமே பார்க்கிங் செய்ய அனுமதித்தனர். ஆனால் இங்கு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வந்தவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. மேலும் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
பெரும்பாலானவர்கள் முகக்கவசங்கள் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இங்கு தற்போது ஸ்னாக்ஸ், பொம்மைகள் விற்கும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மக்கள் இந்த கொரோனா நேரத்தில் கடற்கரையை திறப்பது தேவையான ஒன்றா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…