ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி திருவிழா. ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது

                                    File Photo – vaikasi peruvizha

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 22 ஆம் தேதி முடிவடைகிறது,

முதல் 10 நாள் நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

ஜூன் 2 ஆம் தேதி கொடியேற்றம். அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம்.

ஜூன் 4 ஆம் தேதி காலை 6 மணிக்குப் பிறகு அதிகார நந்தி வாகன ஊர்வலம். ஜூன் 6 ஆம் தேதி,(இரவு 9 மணியளவில்). ரிஷப வாகன ஊர்வலம்

ஜூன் 7 ஆம் தேதி பல்லக்கு விழா. ஜூன் 8 ஆம் தேதி காலை 7.45 மணியளவில் தேர் .

ஜூன் 9 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு சுக்ர பகவான் கண் பெறுதல். ஜூன் 11 – இரவு 8 மணி – திருக்கல்யாணம்.

ஜூன் 13 முதல் 22 வரை – கோயில் வளாகத்தில் தினமும் மூன்று இசை நிகழ்ச்சிகள் கொண்ட கலாச்சார விழா நடைபெறவுள்ளது.

விழா பற்றிய முழு நிகழ்ச்சி விவரங்கள் கீழே உள்ள லிங்கில் உள்ளது.

<<Click here fest schedule>>

Verified by ExactMetrics