மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் வைகாசி உற்சவம் இந்த ஆண்டு மே 25ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மே 27ஆம் தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலமும், மே 29ஆம் தேதி இரவு 9 மணிக்கு ரிஷப வாகன ஊர்வலமும் நடைபெறும்.
மே 31ம் தேதி காலை 7.25 மணிக்கு தேர் ஊர்வலம் தொடங்குகிறது.
ஜூன் 3-ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 9.15 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்று, அன்று இரவு கொடி இறக்கப்படும்.
விடையாற்றி உற்சவத்தின் ஒரு பகுதியாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு இசைக் கச்சேரிகள் நடைபெறும்.
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் திருவிழாவிற்கு வாகனங்களை தயார் செய்வதைக் காட்டுகிறது.
செய்தி: எஸ்.பிரபு