Categories: சமூகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் இன்று டிசம்பர் 12 மற்றும் நாளை டிசம்பர் 13ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் உள்ளது, உங்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலுடன் முகாமில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த முகாம் மயிலாப்பூரில் பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகளிலும் (அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடிகள்), சமுதாய நலக்கூடங்களிலும், சில தனியார்மண்டபங்களிலும் நடைபெறுகிறது. இது வருகிற மே மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல்களில் பெயரில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்களை சேர்க்க நடைபெறும் கடைசி முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

7 hours ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

7 hours ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

7 hours ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

1 day ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

4 days ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

6 days ago