மழை வெள்ளத்தில் 48 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மந்தைவெளி காலனியில் வசிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற போராட்டத்தில் குரல் எழுப்ப முயன்றவர்களிடம் தி.மு.க.வினர் வாக்குவாத சண்டையில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சனையை போக்க உள்ளூர் காவல்துறை மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வின் தலையீடு தேவைப்பட்டது.
சமீபகாலமாக செயின்ட் மேரிஸ் ரோடு – தேவநாதன் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் சென்றுள்ளது.
நவம்பர் 11ம் தேதி மாலையில், மந்தைவெளி தபால் நிலையம் எதிரே உள்ள சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், இப்பகுதியில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் அமைந்துள்ள மெட்ரோவாட்டர் பம்பிங் ஸ்டேஷன் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இப்பகுதியிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழைநீரும், கழிவுநீரும் கலந்து பல வீடுகளில் தேங்கி நின்றது. இது சம்பந்தமாக உள்ளூர் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடியிருப்பாளர்கள் சிலர் வெள்ளிக்கிழமை மதியம் தெருவில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இரண்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் கொஞ்ச நேரத்தில் பல திமுக தொண்டர்கள் வந்து போராட்டத்தில் குரல் எழுப்பியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு (தி.மு.க.வைச் சேர்ந்த) போலீஸாரைப் போலவே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இந்த பிரச்சனையை சரிசெய்தார்.
<< புகைப்படம் : வெங்கி ஹரி >>
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…