மூன்றாவது நாளாக வெயில் சுட்டெரித்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் பம்புகள் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் முழங்கால் உயரத்திற்கு நீர் உயர்ந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. இயந்திரங்கள் மூலம் மழை நீர் டி.டி.கே சாலையில் வெளியேற்றப்பட்டது, ஆனால் மறுபுறம் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டது.
தற்போது, பணியாளர்கள் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீருடன் கழிவுநீர் கலந்து, காலனியில் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழைநீரை விட தெருக்களில் கழிவுநீரே அதிகம் உள்ளது.
டி.டி.கே சாலையில் இருந்து செல்லும் தெருவின் மையப் பகுதி வறண்ட நிலையில், காலனிக்குள் சில பகுதிகளில் தண்ணீர் இன்னும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2015-ல் வெள்ளத்தில் காலனி நீரில் மூழ்கியது. தற்போதைய வெள்ளம் மீண்டும் அதை நினைவு படுத்தும் விதம் இருந்தது. ஆனால் இப்பிரச்சனைக்கு இன்னும் நிரந்திர தீர்வு எட்டப்படவில்லை.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…