ஸ்ரீ ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் 77வது ஆராதனை நிகழ்ச்சி. ஜூன் 30.

ஸ்ரீ ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் 77வது ஆராதனை நிகழ்ச்சியை ஹரிகேசாஞ்சலி டிரஸ்ட் மற்றும் நாரத கான சபா அறக்கட்டளை இணைந்து ஜூன் 30ம் தேதி இன்று மாலை 6.00 மணிக்கு நாரத கான சபா மினி ஹாலில் நடத்துகிறது.

கலைஞர்கள் வசுதா ரவியின் – வாய்ப்பாட்டு ; வைபவ் ரமணி – வயலின்; என் சி பரத்வாஜ் – மிருதங்கம். ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற பவானி நாகரத்தினம் ஹரிகேசாஞ்சலி இசைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

வயது 7 முதல் 12 வயது: 1வது பரிசு நித்யாஸ்ரீ. 2வது பரிசு பிரத்யா
வயது 13 முதல் 17: 1வது பரிசு – லக்ஷனா. 2வது பரிசு – ரஞ்சனி ராதா, யாதுஸ்ரீ. 3வது பரிசு – கவுரி நிதி, ஸ்ரீலலிதா. சிறப்பு பரிசு லாஸ்யா.

இந்தப் போட்டியின் நடுவர்களாகப் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.ஏ.பாகீரதி இசைத் துறை HOD, இராணி மேரி கல்லூரி மற்றும் மூத்த வயலின் கலைஞர் வி.வி.ரவி ஆகியோர் இருந்தனர்.

ஹரிகேசாஞ்சலி அறக்கட்டளையின் அறங்காவலராக லதா குமாரசாமி உள்ளார். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் – 9940168728 / 9600040011