மெரினா கடற்கரை எப்பொழுதும் பிசியாக காணப்படும் கடற்கரை ஊரடங்கு நேரத்தில் கூட மக்கள் கடற்கரையோரம் வந்து சென்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் காலை நேரத்தில் நிறைய பேர் நடைபயிற்சிக்கு வருகின்றனர். ஆனால் போலீசார் மெரினா சர்வீஸ் சாலையிலும் நடைபாதையிலும் நடைபயிற்சி செய்ய அறிவுறுத்தினர். மக்கள் கலங்கரைவிளக்கம் முதல் அண்ணாசதுக்கம் வரை நடைபயிற்சிக்கு சென்று வந்தனர். ஆனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் காற்று வாங்க மக்கள் திரண்டு வந்திருந்தனர். போலீசார் கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே மட்டும் மக்கள் அமர அனுமதி அளித்தனர். ஆனால் சில மக்கள் பட்டினப்பாக்கம் லூப் சாலை வழியாக கடற்கரை வரை சென்று வந்தனர். ஆனால் இங்குள்ள மீன் மார்க்கெட் எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் நேற்றும் அதே போல காலை மற்றும் மாலையில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.