உணவகங்களில் மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

இன்று திங்கட்கிழமை காலை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் ஐம்பது சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலையிலே மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள சங்கீதா உணவகத்தில் நிறைய மக்கள் சாப்பிட்டு சென்றனர். இதற்கு முன் ஊரடங்கினால் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதியளித்திருந்தனர். இதன் காரணமாக உணவக வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் ஐம்பது சதவீத மக்கள் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதியளித்துள்ளதால் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Verified by ExactMetrics