மழை பொழிந்தபோதிலும், இந்த கோவிலின் குளம் வறண்டு கிடக்கிறது.

மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோவிலில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. ஏனென்றால் கோவில் அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அதிக நேரம் மக்கள் ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டரை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் குளத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்ணீர் உடனடியாக உறிஞ்சப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் தெருக்களில் ஆங்காங்கே குழாய்கள் அமைது அந்த குழாய்களை ஒருங்கிணைத்து குளத்தின் அடிப்பகுதிக்கு மழை நீர் சென்று சேரும் விதத்தில் ஒரு கட்டமைப்பை அமைத்தனர். அவ்வாறு மழை நீர் குளத்தில் சென்று சேர்ந்தாலும் சுமார் ஒரு மணி நேரத்தில் நீர் உறிஞ்சப்படுகிறது.

Verified by ExactMetrics