சாந்தோம் கதீட்ரலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பாதிரியார் இந்த கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் சமீபத்தில் புதிய பாதிரியாராக அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரூர் பகுதியை சேர்ந்தவர். பாதிரியார் அருள்ராஜுக்கு தற்போது முக்கியமான சவால் என்னவெனில், இந்த பகுதியில் சுமார் ஐம்பது குடும்பங்களில் உள்ள முக்கியமாக வருமானம் ஈட்டக்கூடிய நபர்கள் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து தேவாலயத்தில் உதவி கேட்டுள்ளனர்.

பாதிரியார் கடந்த ஞாயிற்றுகிழமை நடத்தப்பட்ட பூசையின் போது அங்கு வந்திருந்த மக்களிடம், வசதிபடைத்தவர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு குடும்பம் ஒரு குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனெவே ஐந்து முதல் ஏழு குடும்பங்கள் இதுபோன்று கஷ்ப்படுபவர்களுக்கு அவர்களின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை ஏற்க முன் வந்துள்ளதாகவும், மேலும் இன்னும் பலர் வருவார்கள் என்றும் பாதிரியார் எதிர்பார்க்கிறார்.