இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சி

கடந்த புதன்கிழமை (ஜூலை 14) அன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் எளிமையான நிகழ்ச்சியை கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவிகள் சிலர், மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் சேர்ந்து கொண்டாடடினர். இந்த விழாவில் கல்லூரி வளாகத்தில் உள்ள இங்கிலாந்து இராணியின் சிலையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவத்தி ஏற்றி கொண்டாடினர். தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக எங்கும் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இந்த விழாவும் எளிமையாக நடைபெற்றது. மேலும் இதே நாளில் கல்லூரியின் முன்னாள் மாணவிகளில் ஒரு குழு ஆன்லைனில் கலந்துரையாடல் நடத்தினர்.

Verified by ExactMetrics