மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள குறையாத ஆர்வம்.

மயிலாப்பூர் பகுதியில் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. உதாரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் இன்று இங்கு தலா 200டோஸ் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு வந்துள்ளதாகவும், டோக்கன் கொடுக்க ஆரம்பித்த ஒருமணிநேரத்தில் அனைத்து டோக்கன்களும் தீர்ந்து போய்விடுவதாக இங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசி போட வருபவர்களுக்கும் இங்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. தொன்னூறு சதவீதம் நபர்கள் இங்கு நேரிடியாக வந்து தடுப்பூசி போட்டு செல்வதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.

Verified by ExactMetrics