ஆர்.ஏ புரத்தில் சங்கரநேத்ராலயாவின் புதிய கிளை தொடக்கம்

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கிளை ஆர்.ஏ.புரத்திலுள்ள காமராஜர் சாலையில் இந்த வாரம் திறக்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையில் இயங்கி வந்த நவ சுஜா கண் மருத்துவமனை இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் இந்த புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. கண்புரை சம்பந்தமாகவும், இதர கண் சம்பந்தமான சாதாரண சிகிச்சைகள் அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு நோயின் தீவிரம் இருந்தால் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். மருத்துவமனை காலை 7.30 மணிமுதல் மாலை 4 மணி வரை இயங்கும். இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் முன்பதிவு செய்த பின்னரே வரவேண்டும். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 4908 3500