மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ வுக்கு பாராட்டு சான்றிதழ்

மயிலாப்பூரின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ், கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மயிலாப்பூர் தொகுதிக்கு அவர் செய்த நல்ல காரியங்களுக்காக மக்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சான்றிதழில் மக்கள் தங்களுடைய கையொப்பமிட்ட வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் மூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட வாழ்த்து செய்திகளும் இடம்பெற்றுள்ளது.

சமூக ஆர்வலர் சி.எஸ். பாஸ்கர் இந்த பாராட்டுக்கான சான்றிதழை ஆர். ஏ. புரத்தில் உள்ள நடராஜின் புதிய அலுவலகத்தில் வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ நடராஜின் புதிய அலுவலகம் ஆர். ஏ.புரத்தில் உள்ள சங்கீதா உணவகம் அருகே உள்ளது.