கெனால் கால்வாய் அருகே உள்ள கல்வி வாரு தெரு இப்போது அழகுபடுத்தப்பட்டு வருகிறது

கல்வி வாரு தெரு கெனால் கால்வாய் அருகே உள்ள ஒரு பிஸியான இணைப்பு சாலை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சாலை விரிவுபடுத்தப்பட்டு தரம் மிகுந்ததாக மாற்றப்பட்டு வருகிறது. நடைபாதை ஓரமாக நிறைய செடிகள் நடப்பட்டு வருகிறது. மற்றொருபுரத்தில் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் தற்போது குழந்தைகள் விளையாடி வருகின்றனர். மேலும் இந்த பூங்கா அருகே இளைஞர்களுக்காக ஒரு திறந்தவெளி உடற்பயிற்சி கூடமும் திறக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடம் அருகே மழை பொழியும் போது தண்ணீர் தேங்கி நிற்கிறது.